போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு தொடர்ந்து கார் பந்தயங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். கார் பந்தய முன் தயாரிப்பு, மற்றும் பயிற்சிக்காக துபாயில் தங்கியிருந்தார். இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்தது. இதன் ஒருபகுதியாக ஈரான் ராணுவம், துபாயில் உள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் பதற்றத்தை அடுத்து, நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் அஜித். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், காரில் வீடு கிளம்பினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. போர் சூழலில் இருந்து பத்திரமாக நாடு திரும்பியதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.