இனப்பெருக்கம் பற்றி கேள்வி : சமந்தா கொடுத்த பதிலடி
ADDED : 1321 days ago
ஒரு பக்கம் படப்பிடிப்பு, ஓய்வு நேரத்தில் சுற்றுலா என பயணித்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், இதுவரை நீங்கள் இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்ய எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, முதலில் இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் என அவருக்கு பதில் கொடுத்திருக்கிறார். நெட்டிசனின் இந்த விவகாரமான கேள்விக்கு சமந்தா கொடுத்த இந்த பதிலடி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் வைரலாக்கினர்.