உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... - கமல் இடத்தை பிடித்த சிம்பு!

‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... - கமல் இடத்தை பிடித்த சிம்பு!

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது என்பது பலரின் கருத்து. இதனால் நடிகர் சிம்புவிடம் பேசி வந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதாக உறுதியாகி உள்ளது. இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்டைலாக வரும் சிம்பு, ‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... பாக்கலாமா.... '' என கெத்தாக பேசுகிறார். இந்த புரொமோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !