உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா

ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா

நடிகர் ஜெயம் ரவி தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ராஜேஷ் எம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி. சமீபத்தில் இது குறித்து அதிகாரபூர்வமான வெளியானது. இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !