மாறனில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'சிட்டுக்குருவி' பாடல் நாளை வெளியாகிறது
ADDED : 1309 days ago
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் திரைப்படம் மார்ச் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வீடியோ காட்சியின் மூலம் பதில் அளித்த ஜி.வி.பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாறன் படத்தின் 3வது பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார் எனவும் அப்பாடல் திங்கள் கிழமை வெளியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.