விஜய் 67வது படத்தை தயாரிக்கும் தாணு?
ADDED : 1493 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை பிடித்துள்ளது. மேலும் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது .
இந்நிலையில் விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜயின் மாபெரும் வெற்றிப்படமான துப்பாக்கி படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.