உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானே வருவேன் படத்தில் நடிக்கும் மும்பை நடிகை

நானே வருவேன் படத்தில் நடிக்கும் மும்பை நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில் நேற்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மும்பையை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடித்துவருகிறார். விரைவில் இப்படத்தில் பாடல்கள் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !