ராஷ்மிகாவின் முதல் ஹிந்தி படம் ஜூனில் வெளியாகிறது
ADDED : 1561 days ago
தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை சாந்தனு இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதை அடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மிஷன் மஞ்சு படம் வருகிற ஜூன் மாதம் 10-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் அப்பா-மகள் சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் கதையில் உருவாகி வருகிறது.