சாணிக்காயிதம் படத்தின் புதிய ஸ்டில் வெளியானது
ADDED : 1306 days ago
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து உள்ளார். அடுத்தபடியாக மோகன்ஜி இயக்கும் படத்திலும் நாயகனாக நடித்து வருபவர், தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் புதிய ஸ்டில் ஒன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டிலில் தனது கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாரையோ நோக்கி குறி பார்த்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் செல்வராகவன். இந்த ஸ்டில் ரசிகர்கள் மட்டுமின்றி சில பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினி , இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு, வாவ் செல்வா அத்தான் என்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் .