உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்


கடந்த 2024 பிப்ரவரியில் மலையாளத்தில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் வெளியானது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு 250 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொதுவால் என்பவர் இயக்கியிருந்தார். இவரை ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஒருவர் தன்னுடைய பிளாட்டில் இயக்குனர் சிதம்பரம் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார் என்று எர்ணாகுளம் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமினுக்கு விண்ணப்பித்தார் இயக்குனர் சிதம்பரம்.

அந்த மனுவில், “எனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைகள் நடைபெற்ற உரையாடல்கள் பட தயாரிப்பு சம்பந்தமான தொழில்நுட்ப ரீதியான உரையாடல்கள் தான்.. என்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிற நாளில் இருந்து நான்கு வருடங்கள் கழித்து இந்த புகார் காவல் நிலையத்தில் அளி]க்கப்பட்டுள்ளது. அதனால் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார் இயக்குனர் சிதம்பரம். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தற்போது சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !