30 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராசுக்குட்டி ஜோடி
ADDED : 1303 days ago
30 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படமான ராசுக்குட்டியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா. நடிகை லட்சுமியின் மகள். தற்போது இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்குகிறார். முதல் நீ முடிவும் நீ' படப்புகழ் ஹரிஷ், 'வாழ்' படப்புகழ் பிரதீப் ஆண்டனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறர், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். ரொமான்ஸ், காமெடி, நிறைந்த இதன் படப்பிடிப்பு, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.