ஆர்ஆர்ஆர் ரிலீஸ் - ஆணிப் படுக்கையை ஏற்படுத்திய திரையரங்க நிர்வாகங்கள்
ADDED : 1295 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட படம் 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்களால் தியேட்டர்களில் திரை சேதம் ஏற்படாமல் இருக்க ஆணி படுக்கை , முள் கம்பி தடுப்புகள் போன்றவற்றை சில ஆந்திர திரையரங்க நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ளனர் .