அஜித் 62 பட கதை இதுதானா?
ADDED : 1294 days ago
அஜித் நடிக்கும் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாய் ஊதியம் வாங்கப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையை பற்றிய தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது . தமிழகம் முழுவதும் உணவு நிறுவங்கள் ஆரம்பித்து வளர்ந்து வரும் அஜித்தை கார்ப்பரேட் நிறுவன கும்பல் அவரை வீழ்த்த நினைக்கும் கதைதான் என்று சொல்கிறார்கள் .