உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி

மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி

கேரளாவைச் சேர்ந்த அர்ச்சனா ரவி, தமிழில் 'அட்டு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2017ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்திற்கு பிறகு அர்ச்சனா ரவி அழகி போட்டிகளில் கவனம் செலுத்தினார். மிஸ் தென்னிந்திய அழகி, மிஸ் யுனிவர்சல் இண்டியா, மிஸ் இண்டர்நேஷனல், சூப்பர் மாடல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டார். சிலவற்றில் டைட்டிலும் வென்றார்.

இந்த நிலையில் தற்போது 'நீ பேரவர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கிறார்கள். அசோக்குமார் கலைவாணி இயக்கி உள்ளார். நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன், ஒய்ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.வரும் 27ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது “இன்றைய இளம் தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !