வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லுாரி அடுத்து சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ராதிகா, பவானிஸ்ரீ உட்பட பலர் நடிக்கிறார்கள். கையில் சின்ன குழந்தையுடன் சூர்யா இருக்கும் பர்ஸ்ட் லுக் வைரல் ஆனது. அதை பார்த்தவர்கள் இது வித்தியாசமான கதை. விஸ்வநாத் என்பவரின் மகன் சூர்யா, கையில் இருக்கும் குழந்தை அவரின் தம்பி. அந்த குழந்தையை அவர் எப்படி வளர்க்கிறார் என்ற ரீதியில் படம் இருக்கும் என்றனர்.
தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் துப்பாக்கி சுடும் வீரராக சஞ்சய் விஸ்நாத்தாக வரும் சூர்யா, 40 வயதை கடந்த நபர். அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா நடித்துள்ளார். சூர்யா பக்குவப்பட்ட நபராக அந்த ரோலில் பிட்டாகி உள்ளார். அதேப்போல் குறும்புத்தனம் செய்யும் 20 வயது சுட்டி பெண்ணாக, சூர்யாவை காதலிப்பவராக மமிதா உள்ளார். டீசர் மேக்கிங், ஜிவி பிரகாஷின் இசை பக்காவாக பொருந்தி உள்ளது. அதேசமயம் படத்தின் முதல் பார்வை வந்தபோது வெளியான குழந்தை தொடர்பான விஷயம் டீசரில் சொல்லப்படவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் டீசரை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.