உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு

சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா பைஜு. அப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. அதை அடுத்து விஜய்யுடன் ஜனநாயகன், தனுஷ் உடன் கர, சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் டியூட் படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதிலும் நாயகியாக சிம்புக்கு ஜோடியாக மமிதாவை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரும் சம்மதம் சொல்லி உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !