சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை கடந்த மூன்று மாதங்களாக சிக்கலில் தவித்து வருகிறது. இதனால் ஜனவரி 9ம் தேதி படம் ரிலீஸ் ஆகவில்லை. படக்குழு கோர்ட்டுக்கு செல்ல, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது. ஆனாலும் சட்டப்படி இந்த விஷயத்தை தீர்க்க முடியாது என தெரிந்து கொண்ட படம் நிறுவனம் வழக்கை ஆபிஸ் பெற்றது.
அதைத் தொடர்ந்து மார்ச் 9ம் தேதி சென்னையில் ஜனநாயகன் படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை நாளை சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்.
நாளை சென்சார் போர்டு உறுப்பினர்கள் படம் பார்க்க உள்ளனர். அவர்கள் படத்தை ஏற்று சிக்கல்கள் தீர்க்கப்பட்டு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கு முன்பு ஜனநாயகன் படம் வெளியாகுமா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது. ஏப்ரல் 23க்கு பின்பு ஜனநாயகன் வெளியாகவே அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ரீசென்சாரிலும் சிக்கல் தொடர்ந்தால் படக்குழு மீண்டும் கோர்ட்டை நாட வேண்டிய நிலைமை ஏற்படும்.