கன்னியாகுமரியில் படமாகும் சூர்யா - பாலா கூட்டணியின் புதிய படம்!
ADDED : 1652 days ago
பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான நந்தா, பிதாமகன், மாயாவி படங்கள் சூப்பர்ஹிட்டாக அமைந்தன. மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது.
கிராம வாழ்வியலை கதைக்களமாக இப்படம் கொண்டுள்ளதாகவும், இந்தப்படத்தில் சூர்யா காது கேட்காத, வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.