யானையுடன் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடிய ஜனனி ஐயர்!
ADDED : 1443 days ago
தமிழில் பாலா இயக்கிய அவன் இவன் என்ற படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடலுக்கு பல நடிகர் நடிகைகளும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தில் விஜய் பின்னணி பாடி உள்ள ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியிடப்பட்டு ஹிட் அடித்துள்ளது. தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நடிகை ஜனனி ஐயர் அங்குள்ள ஒரு யானையுடன் இணைந்து ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.