உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தனுஷுடன் இணைந்த கென் கருணாஸ்

மீண்டும் தனுஷுடன் இணைந்த கென் கருணாஸ்

மாறன் படம் வெளியானதை அடுத்து தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வாத்தி படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது இளைய மகனாக நடித்திருந்த கென் கருணாஸுக்கு, அசுரன் படத்தை போலவே இந்த வாத்தி படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !