உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா?

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா?


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான்,கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தை கடந்த வருடத்தில் இருந்து திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகமால் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 8.5 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது இந்த விலை ரொம்ப குறைவாக உள்ளது என்பதால் ஒருவேளை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றால் இந்த தொகையில் இருந்து இன்னும் சில மடங்கு அதிகமாகும் முறையில் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூடுதலாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !