வாசகர்கள் கருத்துகள் (1)
திருமணம் மட்டும் அல்ல, சமரசம் உலாவும் இடமும் தான்.
சமீப நாட்களாக நடிகை திரிஷா மீது பார்த்திபன் சில சர்ச்சையான விமர்சனங்களை கூறியதும் அதற்கு திரிஷாவின் கடும் பதிலடியும் பிறகு பார்த்திபனின் காட்டமான பதிலும் என திரையுலகமும் சோசியல் மீடியாவும் பரபரப்பாக காணப்பட்டது. பார்த்திபனின் கடைசி பதிவுக்கு திரிஷா எதுவும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் பார்த்திபன் மகள் கீர்த்தனா, திரிஷாவுடன் மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்று இணைந்து கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
பிரபலங்களின் ஸ்டைலிஸ்ட் ஆன ஏகா லக்கானி மற்றும் தயாரிப்பாளர் ரவி பக்சந்த்கா இருவரின் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் இதில் தான் திரிஷா மற்றும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இருந்தாலும் இந்த புகைப்படம் இருவர் தரப்பில் இருந்தும் வெளியிடப்படாமல் பொதுவான நபர்களால் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
திருமணம் மட்டும் அல்ல, சமரசம் உலாவும் இடமும் தான்.