ஆஸ்கர் விருது குழுவில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்
ADDED : 1 hours ago
இந்திய சினிமாவின் பிரபலமான எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். 40 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளார். தற்போது இவருக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக திரைப்படத் துறையின் உயரிய அமைப்புகளில் ஒன்றான ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக தேர்வாகி உள்ளார். இதற்காக தென்னிந்திய எடிட்டர் சங்கம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஸ்ரீகர் பிரசாத் கூறுகையில், ''இந்திய சினிமா சார்பில் ஆஸ்கர் விருது குழுவில் படங்களை பார்த்து ஓட்டளிக்கும் உறுப்பினராக தேர்வானது மகிழ்ச்சி. 40 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான படங்களை எடிட் செய்தவன் என்ற முறையில் 17 மொழிகளில் 9 தேசிய விருதுகளை பெற்றவன் என்ற முறையில் இந்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.