உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தீபாவளி வெள்ளி விழா படம் : கே.பாலச்சந்தருக்கு அதிர்ச்சி தந்த 'பார்த்தாலே பரவசம்'

பிளாஷ்பேக் : தீபாவளி வெள்ளி விழா படம் : கே.பாலச்சந்தருக்கு அதிர்ச்சி தந்த 'பார்த்தாலே பரவசம்'

பொதுவாக தீபாவளி பண்டிகையில் கே.பாலச்சந்தர் தனது படங்களை வெளியிடுவதில்லை. காரணம் அப்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மக்களால் தனது அழுத்தமான படங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று கருதியிருந்தார். என்றாலும், அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, தண்ணீர் தண்ணீர் போன்ற அவரது சில படங்கள் தீபாவளி பண்டிகையில் வெளியானது.

தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு வெளியிட்ட படம் 'பார்த்தாலே பரவசம்'. காரணம் இது கே.பாலச்சந்தரின் 100வது படம். அன்றைக்கிருந்த இளம் நடிகர், நடிகைகளை கொண்டு இளமை ததும்பும் ஒரு காதல் செண்டிமெண்ட் படத்தை தர முடிவு செய்தார். அப்போது முன்னணியில் இருந்த மாதவன், சிம்ரன், சினேகா ஆகியோரை கொண்டு படத்தை உருவாக்கினார். இதில் சினேகா கேரக்டரில் முதலில் அசின் நடிப்பதாக இருந்தது. அதோடு படத்தில் கமல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்த கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தது ரஜினிகாந்த்.

மாதவனும், சிம்ரனும் காதலித்து திருமணம் செய்வார்கள், சில ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுக்கு இன்னொரு காதல் இருந்ததும், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் சிம்ரனுக்கு தெரியவரும்போது இருவரும் பிரிகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார், பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் படம் தோல்வி அடைந்தது. பொதுவாக தோல்விகளுக்கு வருந்தாத கே.பாலச்சந்தர் தனது 100வது படம் தோல்வி அடைந்ததில் பெரும் வருத்தம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !