என் குழந்தைங்க வாழ்க்கையில் நெருப்பு மூட்டாதீங்க : தம்பி ராமையா ஆவேசம்
நடிகர் அர்ஜூனின் முதல் மகள் ஐஸ்வர்யாவை, குணசித்ர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சானாவிற்கு சமீபத்தில் இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் உமாபதி உள்ளிட்ட தம்பி ராமையாவின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் உமாபதியும், ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக தம்பி ராமையா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : யார் இந்த மாதிரி கீழ்த்தரமான வதந்தியை பரப்பினாங்கன்னு தெரியல. இது நூற்றுக்கு நூறு சதவீதம் பொய். உமாபதியும், ஐஸ்வர்யாவும் சென்னை மயிலாப்பூரில் தனியாக ஒரு வீட்டில், ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்காங்க. அவர்கள் வாழ்க்கையில ஏன் நெருப்ப மூட்டணும்?.
திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று பேசுகிறார்கள். சுமார் 12 நாட்கள் அங்க போய் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் போகவில்லை. சென்னையில பிரம்மாண்டமான ரிசப்ஷன் நடக்கப்போகுது. நாங்க எல்லாரும் அந்த நிகழ்ச்சியில கலந்துக்க போறோம். அதுக்குள்ள யார் இந்த மாதிரி தப்பான பிரச்சாரத்தை ஆரம்பிச்சாங்கன்னு புரியவில்லை என்கிறார்.