குடும்பமாக இணைந்து கலக்கிய 'பிளாஸ்ட்' முதல் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?
தற்காப்புக் கலையில் குடும்பமே சேர்ந்து கலக்கிய 'பிளாஸ்ட்' முதல் பல புதிய படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
பிளாஸ்ட்
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பிளாஸ்ட்'. தற்காப்புக் கலையை மையமாக வைத்து வெளிவந்த இந்த படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இன்று (ஜூன் 25ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
Bahubali The TorchBearer
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி மேக்கிங் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Bahubali The TorchBearer'. நாளை (ஜூன் 26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கப் (CUP)
மலையாள இயக்குநர் சஞ்சு வி. சாமுவேல் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான திரைப்படம் ' கப் (CUP)'. இந்த படத்தில் மேத்யூ தாமஸ், பசில் ஜோசப் மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (ஜூன் 25ம் தேதி) மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்பிலி சவுத் தளத்தில் வெளியாகியுள்ளது.
டியர் கேரளா குட்டி (Dear Kerala Kutty)
அவினாஷ், மமிதா பைஜூ, சாந்தி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'டியர் கேரளா குட்டி (Dear Kerala Kutty)'. இந்த படம் இன்று (ஜூன் 25ம் தேதி) ஈடிவிண் தளத்தில் வெளியாகியுள்ளது.
லிங்கம்
இயக்குநர் லக்ஷ்மி சரவண குமார் இயக்கத்தில், கதிர், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள தொடர் ' லிங்கம்'. இந்த தொடர் நாளை (ஜூன் 26ம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
மம்பட்டியான் ஸ்டார்ஸ்
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள வெப் தொடர் 'மம்பட்டியான் ஸ்டார்ஸ்'. இந்த தொடர் நாளை (ஜூன் 26ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
முத்தாஸி (Muthassi)
மலையாளத்தில் உருவாகியுள்ள க்ரைம் திரில்லர் வெப் தொடரான ' முத்தாஸி (Muthassi)'. இது நாளை (ஜூன் 26ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மூன்றாம் கண்
நடிகர் விதார்த், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ' மூன்றாம் கண்'. இந்த படம் நாளை (ஜூன் 26ம் தேதி) சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகவுள்ளது.
லிட்டில் பிரதர்
ஜான் சீனா மற்றும் எரிக் ஆண்ட்ரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வெளியான திரைப்படம் 'லிட்டில் பிரதர்'. இந்த படம் நாளை (ஜூன் 26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரிவால்வர் ரிங்கோ (Revolver Rinko)
கிரண் நாராயணன் இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், லாலு அலெக்ஸ் மற்றும் விஜிலேஷ் கரயாட் ஆகியோர் நடித்த திரைப்படம் ' ரிவால்வர் ரிங்கோ (Revolver Rinko)'. இந்த படம் நாளை( ஜூன் 26ம் தேதி) சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகவுள்ளது.