உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி

‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி


மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பிளஸ்சி. கடந்த வருடம் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‛ஆடுஜீவிதம்' படத்தை இயக்கியது இவர்தான். இவரது மகன் ஆதித் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார். மோகன்லாலை வைத்து ‛பிரம்மராம், தன்மாத்ரா, பிரணயம்' என மூன்று படங்களை இயக்கியுள்ளார் பிளஸ்சி.

அது மட்டுமல்ல மோகன்லால் நடித்த ‛நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே பிளஸ்சியும் மோகன்லாலும் நெருங்கிய நண்பர்கள். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மோகன்லால், “நிஜமாகவே எனது மகன் திருமண நிகழ்வில் நான் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதே போன்ற உணர்வில் தான் நான் இருக்கிறேன். இதுவே இயக்குனர் பிளஸ்சி மற்றும் அவரது குடும்பத்துடன் நான் எந்த அளவிற்கு நெருக்கமானவன் என்பதை சொல்லும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !