மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1279 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1279 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1279 days ago
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி, தனது தோழியை பறிக்கொடுத்தவர். காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பழையபடி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திருமணம் பற்றி ரசிகர்கள் அடிக்கடி கேள்வி கேட்டு வந்தனர். திடீரென தான் திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‛‛நான் திருமணம் செய்ய இருக்கிறேன். என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம். ஆனாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என்கிறார் யாஷிகா.
1279 days ago
1279 days ago
1279 days ago