250 மில்லியன் பார்வைகளை கடந்த 'அரபிக் குத்து' பாடல்
ADDED : 1281 days ago
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'அரபிக் குத்து' பாடல் யூடியூப்பில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.