ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகிய வில் ஸ்மித்
ADDED : 1279 days ago
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதேசமயம் அன்றைய நிகழ்வில் தனது மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலையை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் இவர் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வில் ஸ்மித்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இருப்பினும் பின்னர் அவர் வருத்தமும் தெரித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்த வில் ஸ்மித் இந்த சம்பவத்தால் தனது பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.