விஜய்யுடன் நடிக்கும் சரத்குமார்
ADDED : 1527 days ago
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றார். இதை வைத்து பார்க்கும்போது விஜய்யுடன் சரத்குமாரும் இப்படத்தில் இணைந்து நடிப்பது தெரிய வந்துள்ளது.