தனுஷின் மயக்கம் என்ன மொமெண்ட்
ADDED : 1278 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது .
இந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவனும், தனுஷும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் செல்வராகவன் அருகில் தனுஷ் மொபைல் போனில் போட்டோ எடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் .