உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண்

'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண்


தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் தற்போதைய துணை முதல்வருமான பவன் கல்யாண் ஒரு பக்கம் அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் தான் ஏற்கனவே நடித்து வந்த படங்களிலும் கவனம் செலுத்தி ஒவ்வொன்றாக முடித்து ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் நீண்ட கால தயாரிப்பாக இருந்த உஸ்தாத் பகத்சிங் திரைப்படம் ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகி வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக தனக்கு பேசிய சம்பளத்தில் பவன் கல்யாண் கணிசமான அளவு விட்டுக் கொடுத்துள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே இந்த படத்தில் நடிப்பதற்காக பவன் கல்யாணுக்கு 5 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்ததாம். அதன்பிறகு பவன் கல்யாணின் அரசியல் பயணம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப் போனது. நீண்ட நாட்கள் கிடப்பிலும் போடப்பட்டிருந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு தன்னால் பெரிய அளவில் பொருளாதார சுமை ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தே பவன் கல்யாண் தனது சம்பளத் தொகையில் பெரிய அளவு விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !