விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கும் மலையாள நடிகை
ADDED : 1279 days ago
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான எப்ஐஆர் திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்திற்கு பிறகு கட்டா குஸ்தி என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை விஷ்ணு விஷால் உடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார் . இதற்கு முன்பு ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் ஆக்ஷன், தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் புத்தம் புது காலை 2 படத்திலும் , பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.