வாசகர்கள் கருத்துகள் (1)
இது தேவையில்லாத செய்தி
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் 'ஜனநாயகன்' . பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையில் படம் சிக்கி கோர்ட் வரை சென்றதால் படம் வெளியாகவில்லை. பின்னர் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பி பெற்று கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று ரிவைசிங் தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரிவைசிங் குழுவில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் ஜனநாயகன் படத்தை ரிவைசிங் தணிக்கை பார்க்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் படத்திற்கு அடுத்தவாரத்தில் சென்சார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும் ஜனநாயகன் படத்தை தேர்தல் நிறைவு பெற்ற அடுத்தடுத்த வாரங்களில் திரைக்கு கொண்டு வருவதற்கான முடிவில் தான் படக்குழு உள்ளனர் என கூறப்படுகிறது.
இது தேவையில்லாத செய்தி