'பிசாசு 2' பட உரிமையை கைப்பற்றிய விஜய் தயாரிப்பாளர்
ADDED : 1280 days ago
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் தெலுங்கு திரையரங்கு ரிலீஸ் உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு கைப்பற்றியுள்ளார் . இவர் விஜயின் 66 வது படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .