தெலுங்கு படத்தை இயக்கும் ஹரி?
ADDED : 1530 days ago
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹரி அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஹரி அடுத்ததாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவரும் நிலையில் இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைந்துள்ளார்.