உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீஸ்ட் கதை சர்ச்சை; யோகி பாபு சொன்ன பதில்!!

பீஸ்ட் கதை சர்ச்சை; யோகி பாபு சொன்ன பதில்!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னாதாஸ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படம் வருகிற 13-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து பீஸ்ட் படம் கூர்க்கா படத்தை போல் இருப்பதாக சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்தது. அதையடுத்து இயக்குனர் நெல்சன் கூறுகையில், பீஸ்ட் படம் எந்த படத்தின் காப்பியும் இல்லை. சில படத்தின் சாயல் தெரிந்தாலும் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் யோகிபாபு அளித்த ஒரு பேட்டியில் பீஸ்ட் படம் விஜய்யின் அருமையான படம் கண்டிப்பாக இந்த படமும் அவரது மற்ற படங்களைப் போன்று தாறுமாறாக இருக்கும் என்று சொன்னவர் பீஸ்ட் படத்திற்கும் கூர்க்காவிற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என்பது குறித்து செய்வதற்கு மறுத்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !