ராம் - நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1269 days ago
மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை ராம் இயக்கி வருகிறார். அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ்கோடி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு இப்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மற்ற பணிகள் விரைவில் துவங்குகின்றன. தமிழ், மலையாளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதுபற்றி சூரி கூறுகையில், ‛‛இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன்னுடைய ரயில் பயணங்கள் மறக்க முடியாத நிகழ்களாக இருக்கும். அதுபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது. பிரியா விடை பெறுகிறேன்'' என்றார்.