மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்'
ADDED : 1553 days ago
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மோகன்ஜி தனது அடுத்த படத்திற்காக செல்வராகவனுடன் கூட்டணி அமைத்துள்ளார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இன்று(ஏப்., 16) இந்த படம் துவங்கி உள்ளது. அதோடு படத்திற்கு பகாசூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. திங்கள் முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.