அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1272 days ago
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து கார்த்திக் என்பவரது இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்தில் நடித்து வந்தார். நாயகிகளாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.