உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத்

இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத்


தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு இவரின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', நானி நடிப்பில் 'தி பாரடைஸ்', அல்லு அர்ஜூனின் 23வது படம் என இப்போதும் பிஸியாக இசையமைத்து வருகிறார்.

அவ்வப்போது இயக்குனர்கள் நெல்சன், விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களுக்கு பாடல் அல்லது பட அப்டேட் புரோமோக்களில் நடித்து ரசிக்கவும் வைத்துள்ளார். இதில் லோகேஷ் கனகராஜ் 'டிசி' எனும் படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்த நிலையில் அவர் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. லோகேஷ் நடிகரானது போல், உங்களுக்கு நடிப்பு ஆசை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு அனிருத், ''நீங்க ஹீரோவாக நடிங்க லோகேஷ் கனகராஜ். ஆனால் நான் ஒரு போதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று அவரிடம் கூறினேன். எனக்கு இசையில் தான் ஆர்வம். நான் சினிமாவுக்கு வந்த 15 ஆண்டுகளில் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னொரு ரவுண்டு போகணும். அதற்கு 15 ஆண்டுகள் போதாது. இசையில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. இசை வீடியோ மற்றும் புரோமோ வீடியோவில் மட்டும் தான் வருவேன்'' என பதிலளித்துள்ளார் அனிருத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

தியாகு, கன்னியாகுமரி
2026-03-04 14:08:49

நீ போடுற இசையையே கேக்க சகிக்காது, இதுல நடிப்பு வேறயா? நீயெல்லாம் நடிக்காமல் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. ரஜினி மட்டும் இல்லையென்றால் நீயெல்லாம் பஸ்டாண்டில் பாட்டுப்பாடி பொழப்பை ஓட்டவேண்டியிருக்கும். ஏதோ நீ செய்த புண்ணியம் ரஜினி உனக்கு சொந்தக்காரராக அமைஞ்சிட்டாரு. நீ வந்த பிறகுதான் தமிழ் சினிமா இசையே அழிஞ்சு போயிடுச்சு. எப்ப பாரு டமால் டுமீல்னு காதுல வந்து குடையிற மாதிரி இசை அமைத்து மொத்த தமிழ் சினிமாவை தமிழ் பாட்டுக்களை காலி பண்ணிட்ட.