தமிழகத்தில் 191 கோடி வசூலித்த 'கருப்பு'
ADDED : 3 hours ago
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. உலக அளவில் இப்படம் 340 கோடி வசூலித்ததாக கடந்த ஜூன் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
தற்போது தமிழக வசூலாக மட்டும் 191 கோடியை வசூலித்துள்ளதாக தமிழக வினியோக நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது.
படம் வெளியான 3 நாட்களில் 60 கோடி, 4 நாட்களில் 80 கோடி, 7 நாட்களில் 100 கோடி, 10 நாட்களில் 130 கோடி, 13 நாட்களில் 150 கோடி, 20 நாட்களில் 175 கோடி வசூலித்துள்ளதாக இதற்கு முன்பு அறிவித்துள்ளார்கள்.
அதன் பின் கூடுதலாக 16 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் ஓடிடியில் ஜூன் 12ம் தேதியே வெளியாகிவிட்டது. இருப்பினும் ஓரிரு தியேட்டர்களில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.