ஹீரோயின் ஆன இன்புளூயன்சர்
முன்பெல்லாம் தமிழ் இயக்குநர்கள் தங்கள் நாயகிகளை கல்லூரி வாசல்களில் தேடினார்கள். இப்போது சமூக வலைத்தளங்களில் தேடுகிறார்கள். யு டியூபர்கள், ரீல்ஸ் பதிவாளர்கள் நாயகியாகி வரும் சூழலில் கேரளாவை சேர்ந்த இன்புளூயன்சர் கல்யாணி அனில், தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஆடை நிறுவனங்களுக்கு இன்புளூயன்சராக இருந்தவர் கல்யாணி, ஒரு மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார். பல இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில் 'குட் நியூஸ்' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார்.
இந்த படத்தை மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார், சாய்பிரபு ஜெயக்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த, நாகேந்திரமுருகன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும், ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சிந்துகுமார் இசை அமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “பாண்டிராஜ் சாருடன் பணிபுரிந்ததன் மூலம், குடும்பங்களுக்குப் பிடித்தமான கதைகளை எப்படி உருவாக்குவது என்பதை நான் கற்றுக்கொண்டேன். 'குட் நியூஸ்' திரைப்படம் உணர்வுகள், சிரிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு எதார்த்தமான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். இதை முழு உண்மையோடும் அர்ப்பணிப்போடும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என்றார்.