உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யூகங்களை கிளப்பிய மோகன்லால் படத்தின் சைகை மொழி டைட்டில்

யூகங்களை கிளப்பிய மோகன்லால் படத்தின் சைகை மொழி டைட்டில்


மோகன்லால் நடிப்பில் அவரது 368வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகனும், துல்கர் சல்மான் நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு' படத்தின் இயக்குனருமான அகில் சத்யன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு 'L 368' எனத் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த 'L' என்கிற எழுத்து ஒரு சைகை குறிப்பைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்படத்தில் ஏதேனும் முக்கிய கதாபாத்திரமோ அல்லது மோகன்லாலின் கதாபாத்திரமோ பேச்சுத்திறன் அல்லது செவித்திறன் குறைந்தவராக இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது யூகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' மற்றும் 'தொடரும்' போன்ற வெற்றிப் படங்களில் அவர் மிக எளிமையான தோற்றத்தில் வேட்டி-சட்டையுடன் நடித்திருப்பார். அதேபோல இப்படத்தில் மோகன்லால் லுங்கி, சட்டையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !