பாலிவுட் நடிகர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு ஐடி ஊழியர் கைது
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சமீபத்தில் சுடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பல நடிகர்களுக்கும் அப்படி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பலத்த பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, பிரபல பாலிவுட் நடிகர்களான ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் துஷார் கபூர் ஆகிய நடிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் இமெயில் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் மிரட்டல் செய்திகளை அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரித்த மும்பை போலீசார், தொழில்நுட்பத் தடயங்கள் மற்றும் இணைய வழி பதிவுகளைக் கொண்டு துப்புத் துலக்கி, பெங்களூரைச் சேர்ந்த 30 வயதான ஐஐடி பட்டதாரி மற்றும் ஐடி ஊழியரான வைபவ் மிஸ்ரா என்பவரைக் கைது செய்துள்ளனர். இவை வெறும் கலாட்டாவுக்காக அனுப்பப்பட்ட செய்திகளா அல்லது உண்மையிலேயே பணம் பறிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.