கணவரின் டைரக்சனில் மட்டுமே நடிக்கும் 'தலைநகரம்' நாயகி
இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. பின்னர் 'நான் அவன் இல்லை', 'சபரி', 'வெடிகுண்டு முருகேசன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், மலையாளத்திலும் சம அளவில் நடித்து வந்தார். முதல் திருமண முறிவுக்குப் பிறகு, கடந்த 2015ல் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார் ஜோதிர்மயி. அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ள ஜோதிர்மயி, கடந்த 2024ல் அவரது கணவர் அமல் நீரத் டைரக்சனில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் நடித்த 'போகன்வில்லா' படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் தனது கணவரின் டைரக்சனிலேயே விரைவில் வெளியாக இருக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டூயக்ஸ்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தனது கணவரது டைரக்ஷனில் உருவாகும் படங்களில் மட்டும் நடிக்கலாம் என அவர் முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், சவ்பின் சாஹிர், நஸ்லேன், ரஜிஷா விஜயன் என தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த மலையாள நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.