உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள புரமோஷனில் சூர்யா மிஸ்ஸிங் ; காரணம் இதுதான்

கேரள புரமோஷனில் சூர்யா மிஸ்ஸிங் ; காரணம் இதுதான்


சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நடித்திருப்பதாலும் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாலும் அதனால் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை, ஹைதராபாத் என புரமோஷன் நிகழ்ச்சிகளைப் படக்குழுவினர் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொச்சியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை.

அதே சமயம் சூர்யாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக் குறைவு காரணமாகத்தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சோஷியல் மீடியா மூலமாக ரசிகர்களுக்குத் தகவலை அறிவித்தது. இதனால் ஒரு பக்கம் கேரள ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், சூர்யா விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்றும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ரஜினி, விஜய் போலவே கேரளாவில் சூர்யாவுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !