உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் - விஜய் சேதுபதி

நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் - விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமனிதன்'. இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடந்தது.

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !