மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1235 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1235 days ago
திருமணத்திற்கு முன்பு ஒரு காலகட்டத்தில் நடிகை சமந்தா டாட்டூ வரைந்து கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தார். தான் அறிமுகமான ஏ மாய சேசாவே என்கிற படத்தில் நடித்ததன் ஞாபகார்த்தமாக முதன்முறையாக ஒய்எம்சி என்கிற டாட்டூவை குத்திக்கொண்டார். அதன் பிறகு நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டபின் அவரது பெயரையும் இரண்டு முறை பச்சை குத்திக் கொண்டு இது எங்கள் காதலின் நினைவுச் சின்னம் என்று அப்போது பெருமிதத்துடன் கூறினார் சமந்தா.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த விதமான டாட்டூக்களை குத்திக் கொள்ளலாம் என முன்பு ஐடியாக்கள் வைத்திருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? என்னுடைய இளமை காலத்தில் நான் ஒருபோதும் டாட்டூ குத்திக்கொள்ள கூடாது என்பதில் மிகத்தீவிரமாக இருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.
1235 days ago
1235 days ago